“தோனியா? கோலியா?” இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதில்
13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தென் ஆப்பிரிக்காவை 52 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி, 52 ஆண்டுகால உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய பெண்கள் அணி கைப்பற்றியது. இந்த வரலாற்று வெற்றி நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டத்தைக் கிளப்பியுள்ளது.
இந்த வெற்றியை முன்னிட்டு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னை நகரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் விசேஷ பாராட்டு விழா இன்று நடத்தப்பட்டது. சென்னை வந்த அவருக்கு மேளதாளங்களுடன் பிரமாண்ட மாலை அணிவித்து பள்ளி நிர்வாகம் உற்சாக வரவேற்பு அளித்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனர்.
பாராட்டு விழாவுக்குப் பிறகு, ஹர்மன்பிரீத் கவுர் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இதில் மாணவர்கள் கேட்ட “தோனியா? கோலியா?” என்ற கேள்விக்கும் அவர் சிரித்தபடி பதில் அளித்தார். இந்திய மகளிர் அணியின் வரலாற்று வெற்றியை நெருக்கமாகப் பகிர்ந்து கொண்ட இந்த நிகழ்ச்சி மாணவர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.


