Headlines

இந்திய அணியில் ஷமி ஏன் இல்லை? – தேர்வுக்குழுவிற்கு கங்குலி கேள்வி!

ஹைதராபாத்:
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் சிறப்பான ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸைக் கருத்தில் கொண்டு, அவரை அனைத்து போட்டித் தொடர்களிலும் விளையாட வைக்கலாம் என முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணி விரைவில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மோதவுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 14 அன்று தொடங்கி நவம்பர் 26 அன்று நிறைவடைகிறது. பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களும் நடைபெறவுள்ளன.

இந்த டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ஷுப்மன் கில் கேப்டனாகவும், காயத்திலிருந்து மீண்ட ரிஷப் பந்த் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்த முகமது ஷமிக்கு இடமில்லாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி, இரண்டு போட்டிகளில் 15 விக்கெட்டுகள் எடுத்தும், ஷமி அணியில் சேர்க்கப்படாதது பலரின் விமர்சனத்துக்கு காரணமாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:

“ரஞ்சி கோப்பை தொடரில் ஷமி பந்துவீசுவதை நான் நேரில் பார்த்தேன். அவர் மிகுந்த ஃபிட்னஸுடன் சிறப்பாக விளையாடுகிறார். தனியாகவே பெங்கால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இத்தகைய சிறந்த ஃபார்மில் இருக்கும் வீரர் இந்திய அணியில் சேர்க்கப்படாதது ஏன் என்று புரியவில்லை,” என தெரிவித்தார்.

ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து தற்போது பல முன்னாள் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் தேர்வுக்குழுவின் முடிவை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *