Headlines

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மரணம் – இந்திய திரையுலகில் அதிர்ச்சி!

பாலிவுட்டின் மூத்த நடிகரும், பல தலைமுறையினரால் நேசிக்கப்பட்ட ஸ்டார் நடிகருமான தர்மேந்திரா இன்று (நவம்பர் 24) மதியம் காலமானார். வயது மூப்பு காரணமான உடல்நலக்குறைவால் மும்பையின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்து வீடு திரும்பியும், மருத்துவ கண்காணிப்பில் தொடர்ந்தும் இருந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.

தர்மேந்திரா தனது திரையுலக பயணத்தில் 300க்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். ஷோலே, சீதா-அவுர் கீதா, யாதோன் கி பாராத், தரம் வீர, பூல் அவுர் பத்தர் உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.

கடைசியாக 2023ல் கரண் ஜோஹர் இயக்கிய ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்தில் அவர் நடித்திருந்தார். 1935, டிசம்பர் 8ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில், நஸ்ராலி கிராமத்தில் பிறந்த தர்மேந்திரா, தில் பி தேரா ஹம் பி தேரே திரைப்படத்தின் மூலம் தனது கலைவாழ்க்கையைத் தொடங்கினார்.

அவரது மறைவு பாலிவுட் திரையுலகையே துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல நடிகர்கள், தொழில்துறையினரும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் ஒரே ஒரு சகாப்தத்தை முடிவு செய்துள்ளதோடு, அவரது எளிமை, பணிவு, பல்வேறு கதாபாத்திரங்களில் வெளிப்படுத்திய திறமை என்றும் நினைவில் நிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *