புதுச்சேரியில் விடுதலை நாள் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது
புதுச்சேரியில் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்திற்கான இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முறைப்படி இந்திய ஆட்சி பரப்போடு இணைந்தது. இந்நாளை புதுச்சேரியின் விடுதலை நாளாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. வரும் ஒன்றாம் தேதி புதுச்சேரி மாநிலம் முழுவதும் விடுதலை நாள் கோலாகலத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறை மற்றும் பல்வேறு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொள்ள உள்ளார்.
விடுதலை திருநாளை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை சாலை அமைந்திருக்கும் பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


